மாணவி பாத்திமாவின் பெற்றோரிடம் காவல்துறை மனிதாபிமானமற்ற முறையில் நடந்துள்ளது – சிபிஐஎம் மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன்

சென்னை ஐஐடியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் பகுதியைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி, பேராசிரியர் சுதர்சன பத்மநாபன், உள்ளிட்ட மதரீதியாக தன்னை ஓடியதாகவும் இதனால் மனவேதனை அடைந்து தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் பேசுகையில், ஐஐடி மாணவி பாத்திமாவின் தற்கொலை வருத்தமளிக்கிறது. ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இது போன்ற தற்கொலைகள் அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வழக்கில் தமிழக காவல்துறையினர் இறந்த மாணவியின் பெற்றோரிடம் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து உள்ளது அதற்கு உரிய விசாரணை நடத்த வேண்டியது அரசின் பொறுப்பு என அவர் தெரிவித்துள்ளார்.