கர்ப்பிணி பெண் மீது தாக்குதல் நடத்திய கும்பல்; வழக்கு பதியக்கோரி காவல்நிலையத்தை முற்றுகையிட்ட மாதர் சங்கம்

தூத்துக்குடி புறநகர் வடக்கு தெருவில் கடந்த திங்கட்கிழமை 20/2/ 2020அன்று இரவு சுமார் 11 மணிக்கு மேல் முத்துக்குமார் என்பவரின் மனைவி பேச்சியம்மாள் வயது 24 என்பவர் மூன்று மாதம் கர்ப்பிணி பெண் நாலு பேர் கொண்ட கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 23.1.2020 அன்று காலை மூன்று மாத சிசு கலைந்து விட்டதாகவும் ஆபரேஷன் செய்ய வேண்டுமெனவும் கூறி நேற்று 24.1.2020 அன்று காலை ஆபரேஷன் நடந்துள்ளது.
இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என முத்தையாபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு பிறகு முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் அன்ன ராஜ் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் குற்றவாளிகள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்வதாகவும் கரு கலைந்ததற்கான மருத்துவர் சான்றிதழ் வந்து பிறகு மேற்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார். இதை தொடர்ந்து போராட்டம் தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் தோழர் பூ மயில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி புறநகர் செயலாளர் ராஜா பொதுக்குழு உறுப்பினர்கள் வெள்ளைச்சாமி டேனியல் ராஜ் ஜனநாயக மாதர் சங்க புறநகர் தலைவர் சரஸ்வதி புஷ்பராணி மற்றும் பேச்சியம்மாள் கணவர் முத்து குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்