மாதர் சங்க அமைப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி புறநகரில் கொடியேற்றும் நிகழ்ச்சி

தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் வன்கொடுமைகளுக்கு எதிராக அயராது குரல் கொடுத்து வரும் ஜனநாயக மாதர் சங்கத்தின் அமைப்பு தினத்தையொட்டி தூத்துக்குடி புறநகரில் உள்ள மஞ்சள் நீர்க்காயலில் அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி கொடியேற்றினார். மாவட்ட செயலாளர் பி.பூமயில், புறநகர் தலைவர் ப.சரஸ்வதி, மாவட்டக்குழு உறுப்பினர் புஷ்பராணி உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கிளைத்தலைவர் பட்டுக்கனி தலைமை வகித்தார்.
இந்த அமைப்பு ஏற்கனவே டாஸ்மார்க் கடைகளை மூடக்கோரி,சிம்புவின் பீப் பாடல், பொள்ளாச்சி பாலியல் சம்பவம்,விருதுநகர் பேராசிரியர் நிர்மலா தேவி மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற விவகாரம் ஆகியவற்றில் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று எப்போதும் போராடியது. மேலும் இந்த அமைப்பு சமீபத்தில் 400 கிலோமீட்டர் நடை பயணத்தை பெண்களின் பாதுகாப்பு குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி நடத்தியது.இதில் இறுதியில் சென்னையில் நுழைந்த மாதர் சங்கத்தினரை காவல்துறையினர் அடாவடித்தனமாக தாக்கி கைது செய்த சம்பவமும் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது.