இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றிய டெல்லி வாக்காளர்களுக்கு நன்றி – பிரசாந்த் கிஷோர் ட்வீட்

இந்தியாவின் ஆன்மாவை பாதுகாக்கும் வகையில் வாக்களித்த டெல்லி பொதுமக்களுக்கு தேர்தல் வியூகம் வல்லுனர் பிரசாந்த் கிஷோர் தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
70 தொகுதியைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த பிப்ரவரி எட்டாம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பிஜேபி, காங்கிரஸ் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவியது. இத் தேர்தலில் சுமார் 62.59 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபடி இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கியது. இதில் இரண்டு மணி நிலவரப்படி 57 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியும், 13 தொகுதிகளில் பிஜேபியும் முன்னிலையில் உள்ளது. மேலும் இத் தேர்தலில் ஆம் ஆத்மி 53.6 சதவீத வாக்குகளும் பிஜேபியின் 39.31 சதவீத வாக்குகளும் காங்கிரஸ் 4.10 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளது.
இதனால் ஆட்சியமைக்க தேவையான 36 இடங்களை விட அதிகமான இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்றி தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்னிலையில் இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றியதற்கு டெல்லி வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என தேர்தல் யோக தனியார் நிறுவனமான ஐபிஎம் நிறுவனத்தின் நிறுவன தலைவர் பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் டெல்லியில் மூன்றாம் முறையாக ஆட்சியைப் பிடிக்க வியூகங்களை இவர் வகுத்துக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.