சுச்சிலீக்ஸ் குறித்து 3 வருடத்திற்கு பிறகு முதல் முறையாக மனம் திறந்த பாடகி சுசித்ரா

கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவையும் அதன் தலைமை இடமான கோடம்பாக்கத்தையும் ஒரு குலுக்கு குலுக்கியது சம்பவம் நடிகை மற்றும் பாடகியான சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியான சுச்சிலீக்ஸ் எனப்படும் நடிகை மற்றும் நடிகர்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகும்.
இது ஒருபக்கம் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் பாடகி சுசித்ரா தனது சொந்த பிரச்சனைகளால் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாகவும், திடீரென காணாமல் போய்விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் இது குறித்து சுமார் மூன்று வருடங்களுக்கு பிறகு தற்போது வெளி உலகத்திற்கு வந்து பேசியுள்ள பாடகி சுசித்ரா, தனக்கும் சுச்சி லீக்ஸ் விவகாரத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. தனது சொந்த காரணங்களால் மிகவும் மன உளைச்சலில் இருந்த அவர் அதிலிருந்து மீண்டு வந்து வெளிநாட்டில் ஃபிரெஞ்ச் சமையல் குறித்தான படிப்பை முடித்து நாடு திரும்பியுள்ளார்.
சுமார் மூன்று வருட இடைவெளிக்குப் பின்னர் அவர் பாடகர் ரஞ்சித்துடன் இணைந்து ஒரு பாடலையும் உருவாக்கி உள்ளாராம். மேலும் சுசிலீக்ஸ் குறித்து அவர் பேசுகையில் என்னுடைய ட்விட்டர் அக்கவுண்ட் யாரோ ஹேக் செய்து அதில் நடிகர் நடிகைகளின் அந்தரங்க மற்றும் மோசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு உள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார் அதுதான் தற்கொலை செய்ய முயற்சி செய்ததாக வெளியான தகவல்கள் அனைத்தும் உண்மை இல்லை எனவும் பேசியுள்ளார்.