இலங்கையில் சிங்கள மக்களால் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனராம் கருணா பேச்சு

சிங்கள மக்களால் தமிழ் மக்கள் இத் தேர்தலில் காப்பாற்றப்பட்டுள்ளனர் முன்னாள் இலங்கை அமைச்சர் கருணா கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக கோத்தபயா ராஜபக்சே, பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிலையில் இலங்கை அதிபர் தேர்தல் குறித்த மட்டக்களப்பில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரும்,முன்னாள் இலங்கை மத்திய அமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர கட்சியின் தலைவருமான கருணா அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சவுக்கு வாய்ப்பு அளிக்குமாறு தமிழ் மக்களிடம் கேட்டோம். ஆனால் மக்கள் தெளிவடைய வில்லை என்று கூறினார். சிங்கள மக்களின் வாக்குகளை மட்டுமே அதிபர் உருவாக்கிவிடலாம் என நிரூபித்துக் காட்டிய தேர்தல் இது என்று அவர் கூறினார். மேலும் சிங்கள மக்களால் தமிழ் மக்கள் காப்பாற்ற பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.