சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் முடிவா…?

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வந்த வணிகர்கள் ஜெயராஜ், பெனிக்ஸ் உடலில் அதிக காயங்கள் இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இதனால் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி கருத்து தெரிவித்துள்ளது.
முதல் நிலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்த மூவர் தரப்பிலும் தனித்தனியே வழக்கறிஞர்களை நியமித்து, 4 வாரத்தில் விளக்கமளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போது போலீசார் மிரட்டல் என மாஜிஸ்திரேட் புகார் அளித்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவலர் மீது குற்றவியல் அவமதிப்பு வழக்கு பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரைத்துள்ளது.
நீதிமன்ற உத்தரவின் படி, தூத்துக்குடி எஸ்.பி அருண் பாலகோபாலன், ஏ.டி.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன் ஆகியோர் விசாரணைக்கு நேரில் ஆஜரானார்கள். அவர்களுடன் நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவீன் குமார் அபினபுவும் ஆஜராகி உள்ளார்.
மிரட்டல் புகாருக்கு உள்ளான சாத்தான்குளம் காவலர் மகாராஜனும் நேரில் ஆஜர்
மன அழுத்தம் தான் காரணம்
மன அழுத்தம் காரணமாக மாஜிஸ்திரேட்டை காவலர்கள் அவமதிக்கும் விதத்தில் பேசிவிட்டதாக அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.