சேலத்தில் பாலியல் குற்றவாளிகளை உடனே கைது செய்- Aidwa உ.வாசுகி கோரிக்கை..!

சேலம் மாவட்டம் ஓமலூர் உ.மாரமங்கலம் பகுதியில் பள்ளிக்கூடம் சென்றுவிட்டு நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பியபோது, 6 வயது சிறுமி மூன்று காமக்கயவாளிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இக்கொடுமையை கண்டித்தும், உடனடியாக கயவர்களை கைது செய்யாமல் காலம்தாழ்த்தும் காவல்துறையை கண்டித்தும்,
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணை தலைவர் உ.வாசுகி சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து வலியுறுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மாவட்டத் தலைவர் டி.பரமேஸ்வரி, மாவட்ட செயலாளர் ஐ.ஞானசவுந்தரி, மாவட்ட துணைத்தலைவர் கே.ராஜாத்தி மற்றும் இன்சூரன்ஸ் ஊழியர் சங்க சேலம் கோட்ட நிர்வாகி கலையரசி உள்ளிட்டோர் உடன் உள்ளனர். பாதிக்கப்பட்ட அச்சிறுமியின் குடும்பத்தாரையும் சந்தித்து உ.வாசுகி ஆறுதல் கூறினார்.