காதலர் தினம்: நாய்க்கும் நாய்க்கும் திருமணம் செய்து வைத்த பாரத் சேனா அமைப்பினர்…!

ஆண்டு தோறும் வரும் பிப்ரவரி 14-ஆம் நாள் உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்திற்கு இந்தியாவில் மதவாத ஆர்எஸ்எஸ் பின்னணியில் செயல்படும் அமைப்புகள் கண்டிப்பதுடன், இதில் ஜோடியாக சுற்றி தெரியும் காதல் ஜோடிகளுக்கு வலுக்கட்டாயமாக தாலி கட்ட சொல்லி கட்டாயப்படுத்தும் சம்பவங்களும் அரங்கேறும்.
அல்லது இந்த காதலர் தினத்தை கொச்சைப்படுத்தும் விதமாக கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம் செய்து வைப்பது அல்லது நாய்க்கும் நாய்க்கும் திருமணம் செய்து வைப்பது போன்ற சர்ச்சைக்குரிய நிகழ்வுகளை ஆர்எஸ்எஸ் பின்னணியில் உள்ள இந்துத்துவ அமைப்புகள் செய்வது உண்டு. அந்த வகையில் இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் பாரத் சேனா அமைப்பினர் இரண்டு நாய்களுக்கு திருமணம் செய்து வைத்து காதலர் தினவிழா கண்டித்து கோஷம் எழுப்பினர். மேலும் கோயம்புத்தூர் நகரில் காதலர் தின கொண்டாட்டங்கள் நடைபெறுவதற்கு கண்டனமும் தெரிவித்தனர். இதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Members of Bharat Sena marrying two dogs off in Coimbatore on Wednesday condemning Valentines Day celebrations in the city.