6வது முறையாக பாலன்டோர் விருதை தட்டி சென்ற 32 வயதாகும் மெஸ்ஸி

சர்வதேச அளவில் கால்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு பாலன்டோர் Ballon’Dor 2019 என்ற விருது வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த 2019 ஆம் ஆண்டுக்கான விருது பட்டியலில் முதல் மூன்று இடங்களில் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி(வயது 32), விர்கில் வான் டிக்(வயது 28) மற்றும் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (வயது 34) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.
இன்னிலையில் ஆறாவது முறையாக இந்த விருதினை அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி, சிலி வீரர் லூக்கா மொடிரிக் இடம் இருந்து பெற்றுக் கொண்டார். இதுவரையில் இந்த விருதினை மெஸ்ஸி 6 முறையும் கிறிஸ்டியானோ ரொனால்டோ 5 முறையும் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கைப்பற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் சிலி வீரர் லுகா மோடிரிக் கைப்பற்றினார். 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு 2019ஆம் ஆண்டு இந்த விருதை மீண்டும் கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மெசி இந்த விருதினைப் பெற்றது தொடர்ந்து சமூக வலைதளமான ட்விட்டரில் #BallonDor2019, #Messi ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகிறது.