கிரிஷ் பட நாயகன் மீது பாலியல் வெறிகொண்ட கங்கனா.. அர்ணப் வாட்ஸ்அப் சொல்லும் செய்தி…

பாலிவுட்டின் பிரபல முன்னணி நடிகையாக வலம்வந்து கொண்டு இருப்பவர் தமிழில் தாம்தும் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்த கங்கனா ரணாவத், இவர் தற்போது மத்தியில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக சர்ச்சையான அரசியல் கருத்துக்களையும் தொடர்ந்து கூறிவருகிறார். அது மட்டுமில்லாமல் இவரது அரசியல் கருத்துக்கள் வெறுப்புணர்வை தூண்டுவதாக கூறி இவரது ட்விட்டர் பக்கத்தை கூட அந்நிறுவனம் தற்காலிகமாக முடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் இவர் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Image credits: The Prevalent India
சிறிது நாட்களுக்கு முன் இந்தியாவில் பிரபலமான ஆங்கில செய்தி ஊடகத்தின் உரிமையாளரும், அதன் ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்லிக் டிவி டிஆர்பி முறைகேட்டில் சிக்கியது. அதை பற்றிய விசாரணையில் அர்னாப் கோஸ்வாமி பார்க் ஆணையத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தேஸ்குப்தாவுடன் உரையாடிய 500 பக்கங்கள் கொண்ட வாட்ஸ் ஆப் உரையாடலை மஹாராஷ்டிர காவல்துறை வெளியிட்டது. அந்த உரையாடல் அரசியல் அரங்கில் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த உரையாடலில் நடிகை கங்கனா ரணாவத் பற்றி பேசி இருப்பதும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
அந்த உரையாடலில் கங்கனா ரணாவத் ஒரு விதமான மன நோய் பிடித்தவர் என்றும், அவர் பிரபல முன்னணி பாலிவுட் திரை உலக நாயகன் கிருத்திக் ரோஷனுடன் பாலியல் உறவில் இருந்தார் என்றும், கங்கனா ரித்திக் ரோஷன் மீது பாலியல் வெறிக் கொண்டு இருந்தார் என்றும் இந்த உரையாடலில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய உரையாடல் வெளிவந்ததும் சமூக வலைத்தளங்களில் இதை பற்றிய பேச்சுக்கள் அனைத்தும் அதிகம் கவனம் ஈர்த்தன. ட்விட்டர் பதிவிலும் அவரை மையப்படுத்தி விவாதங்கள் எழுந்தன. கங்கனா ரணாவத் கிருத்திக் ரோஷன் ஆகியோர் க்ரிஷ் 3 மற்றும் கைட்ஸ் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Credits: Pink Villa