பல வன்முறைகளுக்கு இடையில் அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடனும் , 49ஆவது துணை அதிபராக கமலா ஹாரிஸும் பதவி ஏற்பு..!

இன்றைய தினம் அமெரிக்காவில் ஜோபைடன் மற்றும் கமலா ஹாரீசின் பதவியேற்பு விழா முடிந்துள்ள நிலையில் வாஷிங்டன் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
நடந்து முடிந்த மாகணங்களுக்கான தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் புதிய அதிபராக ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோபைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோபைடனும், 49 வது துணை அதிபராக கமலா ஹாரீசும் இன்று பதவியேற்கின்றனர்.
துணை அதிபராக பதவியேற்க உள்ள கமலா அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர், முதல் கருப்பின துணை அதிபர் மற்றும் இந்தியாவை பூர்வீகமான கொண்ட முதல் தலைவர் என்ற 3 பெருமைகளை கொண்டவராகத் திகழ்கிறார். ஏனெனில் இவரது அம்மா இந்தியர்,
பொதுவாக இந்த பதவியேற்பு விழாவின்போது வாஷிங்டன் டிசிக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள் ஆனால் இம்முறை கொரோனா பாதிப்புக்கு மத்தியில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதால் 200 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்வையாளர்கள் அனைவரும் கொரோனா கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழாவையொட்டி வாஷிங்டன் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நாடாளுமன்ற வன்முறை சம்பவத்தின் விளைவாக தற்போது நகர் முழுவதும் சுமார் 25 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் நாடாளுமன்ற கட்டிடத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமெரிக்க கேபிடல் கட்டிடத்தின் மேற்குப் பகுதியில் நடைபெற உள்ள இந்த விழாவில் அதிபராக பதவியேற்க உள்ள ஜோபைடன், 127 ஆண்டு கால பழமை வாய்ந்த தன் குடும்ப பைபிலின் மீது சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்க உள்ளார்.
பதவியேற்புக்கு பின் இருவரும் தங்கள் முதல் உரையை நிகழ்த்த உள்ளனர். விழாவானது இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணி அளவில் தொடங்க உள்ளது.