ரஜினியை சந்தித்து அரசியல் ஆதரவு கேட்க இருக்கிறாரா கமல்…?

டிசம்பர் 31ஆம் தேதி தனது அரசியல் கட்சியை துவங்க இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதற்கு ஒருங்கிணைப்பாளராக பிஜேபியில் இருந்து விலகி வந்த அர்ஜுன் மூர்த்தி என்பவரை நியமித்து இருந்தார்.
ஆனால் அதன் பின்னர் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது அங்கு பணியாற்றியவர்களில் சிலருக்கு கொரோனா தோற்று உறுதியானது.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியை ஆரம்பிக்க முடிவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உடல் நலம் குறித்து விசாரிக்க இருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதில் நடிகர் கமலஹாசன் தனது அரசியல் பிரவேசத்திற்கு ஆதரவு கொருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.