ஈராக்கில் தொடர் போராட்டம் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த அப்துல் மஹதி

ஈராக்கில் பெட்ரோல் விலை உயர்வு மற்றும் பெட்ரோலிய ரேஷன் முறையை மாற்றுதல் போன்ற அரசின் பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து அவ்வப்போது வன்முறைச் சம்பவங்களும் நடந்து வருகிறது.
சதாம் உசேன் ஆட்சிக்குப் பின்னர் ஈராக்கில் நிலையற்ற தன்மை உருவானது. இதனை அடுத்து அந்நாட்டின் பொருளாதாரம் செய்து கொடுததால் வேலையில்லா திண்டாட்டம் ஒரு பக்கம் அறிவித்தது மற்றொரு பக்கம் அரசியல் அதிகாரிகளின் ஊழலால் மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்து.
தற்போதைய அதிபர் அப்துளுக்கு எதிராக போராட்டத்தை நடத்தி வருகின்றனர் இதன் காரணமாக பல்வேறு இடங்களில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை நடந்தது பலர் இறந்துள்ளனர். இரு தினங்களுக்கு முன்னர் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இந்த போராட்டத்தின் காரணமாக 400-க்கும் அதிகமானோர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஈராக்கில் நடைபெற்று வரும் போராட்டங்கள் எதிரொலியால் அந்நாட்டு பிரதமர் அதேல் அப்துல் மஹதி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.