மகாராஷ்டிரா மருத்துவமனையில் தீ விபத்து – 10 குழந்தைகள் பலி
Posted On January 9, 2021
0
193 Views
0 
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பந்தாரா மாவட்டதின் தலைமை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சுமார் 10 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அங்கு விரைந்த தீயணைப்பு படையினரால் அதிர்ஷ்டவசமாக 7 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பதை அறிந்துகொள்ள காவல்துறை சார்பில் வழக்கு பதியப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதே போல் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்ப்பூரில் சுமார் 1317 குழந்தைகள் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் உயிரிழந்தனர். இது இன்றைய முதல்வர் யோகி ஆதித்யநாத் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -