நடிகை சித்ரா தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை காரணமல்ல அடித்து சொல்லும் ஆர்.டி.ஓ., விசாரணை அறிக்கை…

தமிழகத்தில் பிரபலமான சின்னத்திரை நடிகை விஜே சித்ரா காமராஜ் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் சந்தேகத்தின் பெயரில் உடனிருநத கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டு இருந்த ஆர்டிஓ விசாரணைக்கழு மரணம் தொடர்பாக ஆராய்ந்து 16 பக்க அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
நடிகை சித்ராவுடன் தொடர்புடையவர்கள் 15 பேரிடம் விசாரணை நடத்தியதில், அவர் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்யவில்லை எனவும் அறிக்கையில் தகவல் உள்ளதாக போலீசில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஏற்கனவே நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேம்நாத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும் இதுதடர்பாக பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார் ஹேம்நாத் வழக்கறிஞர், VJ சித்ராக்கு அவங்க அம்மா கூட நடந்த பிரச்சனை இதான்” என பரபரப்பு பேட்டி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.