அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தில் இருக்கும் இந்துத்துவ ஆதரவாளர்களை வெளியேற்ற கோரிக்கை.!

கடந்த டிசம்பர் மாதத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக பதவி ஏற்றிருக்கும் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜோ பைடன் நிர்வாகத்திலிருக்கும் பாஜக/ஆர்எஸ்எஸ் அனுதாபிகளை நீக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனநாயகக்கட்சியை சேர்ந்த அதிபர் ஒபாமா ஆட்சி காலத்தில் அவரது நிர்வாக ஊழியர்களாக இருந்த சோனல் ஷா மற்றும் அமித் ஜானி ஆகியோர் ஜோ பைடனின் தேர்தல் பிரச்சாரக் குழுவிலும் உறுப்பினர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராவும் அவர்களை நீக்கவேண்டும் என்றும் பல்வேறு அமெரிக்க – இந்திய அமைப்புகள் குரல் கொடுத்துள்ளன.
இவர்கள் எதிர்க்கும் சோனல் ஷா பிடனின் தந்தை ஆர்எஸ்எஸ் நடத்தும் அங்கு நடந்து வரும் ஏகல் வித்யாலயாவின் நிறுவனர் ஆவார். இவர் பாஜக மற்றும் மோடியுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் இன்னொருவரான அமித் ஜானி அமெரிக்காவின் ஆசிய – பசுபிக் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். இவரும் இந்தியாவின் வலதுசாரி மற்றும் இந்துத்துவ இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவராக இருக்கிறார்.