இந்தியாவில் கொரோனா வைரஸ் இல்லாத மாநிலம்!!!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 7,729 ஆக உயர்ந்துள்ளது .அதே சமயத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 206 இலிருந்து 242 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 516 இலிருந்து 653 ஆக உயர்ந்துள்ளது. என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
இன்று மாலை ஐந்து மணி நிலவரப்படி மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 1,574 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர்.உயிரிழப்பும் இங்கு தான் மிக அதிகமாக உள்ளது இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
நோய் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 969 பேருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது .
உயிரிழப்பு 10 ஆக அதிகரித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் 903 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அங்கு இதுவரை 13 பேர் உயிரிழந்து உள்ளனர் குஜராத் மாநிலத்தில் 308 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் 443 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
பஞ்சாபில் இதுவரை 132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் பதினொரு பேர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானாவில் 64 பேருக்கும் ஆந்திராவில் 357 பேருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் 553 பேருக்கும் உத்தரபிரதேச மாநிலத்தில் 433 இருக்கும் ஆந்திராவில் 381 பேருக்கும் கேரளாவில் 364 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது இந்தியாவில் இதுவரை 543 பேர் நோய் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர் 239 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் தான் நோய்த்தொற்று குறைவாக உள்ளது அங்கு மணிப்பூரில் இருவருக்கும் அருணாச்சல பிரதேசம், திரிபுரா,மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது.
மேலும் மகாராஷ்டிராவில் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1500 தாண்டிவிட்டது இந்நிலையில் மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமர் மோடியிடம் இன்று காணொளி காட்சி மூலம் உரையாடினார் இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் மாநிலத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றார்..
மேகலாயாவில் மட்டும் இதுவரை யாருக்கும் நோய்த்தொற்று ஏற்பட வில்லை
இந்தியாவில் நோய்த்தொற்று சமூக பரவலாக மாறவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதுதொடர்ந்து படியுங்கள் செய்திக்குரல் இணைய செய்தியை நன்றி.!!