விரைவில் சியான் விக்ரமை இயக்கப்போகும் அசுரன் வெற்றிமாறன்

சியான் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கடாரம் கொண்டான் திரைப்படம் முழுக்க முழுக்க மலேசியாவில் எடுக்கப்பட்டது இது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தினை தொடர்ந்து சியான் விக்ரம், தமிழில் நயன்தாரா மற்றும் அதர்வா முரளியை வைத்து இமைக்காநொடிகள் படத்தை இயக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அவருடைய 58வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை முடித்தபிறகு அவர் அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் நகைச்சுவை நடிகர் சூரியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் இப்படத்தை முடித்த பின்பு அவர் சியான் விக்ரம் உடன் கூட்டணி அமைத்து புதிய படமொன்றை எடுக்க உள்ளார் இதில் தகவல் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.