ஐஐடி மாணவி பாத்திமா செல்போனில் பதிவு செய்த தற்கொலை குறிப்பு உண்மையானது – திடுக்கிடும் தகவல்

சென்னை ஐஐடியில் சமூகவியல் துறை இரண்டாம் ஆண்டு படித்து வந்த கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லதீப் கடந்த மாதம் பேராசிரியர்களின் மதரீதியான ஒடுக்குமுறை காரணமாக மனமுடைந்து விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரவியது.
மேலும் இது தொடர்பாக இந்தியா முழுவதும் உள்ள ஐடி நிறுவனங்களில் இதேபோல் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கில் தமிழக தடயவியல் இந்த போனவர்கள் முதல் தகவல் அறிக்கையை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர் மேலும் இதுதொடர்பாக அவர்கள் மாணவி பாத்திமா தனது செல்போனில் பதிவு செய்து இந்த தற்கொலை குறிப்பை உண்மையானது என தெரிவித்துள்ளனர்.