உலக டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி மீண்டும் முதலிடம்

சமீபத்தில் இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-0 என்கிற புள்ளி கணக்கில் கைப்பற்றியது. அதேபோல ஆஸ்திரேலிய அணியும் பாகிஸ்தானை 2-0 என்ற புள்ளி கணக்கில் வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
இந்த ஆண்டின் இறுதியாக நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதை அடுத்து உலக கிரிக்கெட் வாரியம் (ஐசிசி), உலக டெஸ்ட் பேட்டிங், பவுலிங் மற்றும் ஆல்ரவுண்டர் தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டது.
இதையும் கொஞ்சம் படிக்கலாமே :ஆஸ்திரேலிய அணியை சொந்த மண்ணில் வீழ்த்தும் சக்தி கொண்ட ஒரே ஒரு அணி; இங்கிலாந்து வீரர் சூசகம்
இதில் உலக டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் பொருத்தவரை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு புள்ளி பெற்று ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்குத்தள்ளி 928 புள்ளிகளுடன் முதல் இடத்தை கைப்பற்றினார். இதில் இரண்டாவது இடத்தில் ஸ்டீவ் ஸ்மித் 923 புள்ளிகளுடன், மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 877 புள்ளிகளுடனும் முதல் மூன்று இடத்தில் உள்ளனர். இதில் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 12 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தை கைப்பற்றியுள்ளார். இதில் இந்திய அணியின் தரப்பில் நான்காவது இடத்தில் செதேஷ்வர் புஜாரா, ஆறாவது இடத்தில் அஜிங்கிய ரஹானே ஆகிய இருவரும் ஆக்கிரமித்து இருக்கின்றனர்.
இதையும் கொஞ்சம் படிக்கலாமே : அபாரமான பந்து வீச்சால் வங்காளதேசத்தை ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி
அதேபோல் உலக டெஸ்ட் பவுலிங் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் பட் கம்மின்ஸ் 900 புள்ளிகளுடன் முதலிடத்திலும், சவுத் ஆப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் கிசிகோ ரபாடா 839 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும்,வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 830 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சாளர்கள் பட்டியலை பொறுத்தவரை இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 294 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 772 புள்ளிகளுடன் 9வது இடத்திலும், வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி 771 புள்ளிகளுடன் 10வது இடத்திலும் உள்ளனர்.
இதையும் கொஞ்சம் படிக்கலாமே :பிராட்மேன் சாதனையை தகர்த்தெறிந்த ஆஸி.வார்னர்
உலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் சிறந்த ஆல்ரவுண்டர் காண பட்டியலில் இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெற்றுள்ளனர். இப்பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனும் ஜேசன் ஹொல்டர் 473 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 406 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் 381 புள்ளிகளுடன் முதல் மூன்று இடங்களை ஆக்கிரமித்து உள்ளனர். இப்பட்டியலில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் 308 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.