மம்தாவின் முக்கிய அரசியல் தளபதிகளை தன்பக்கம் ஈர்க்கும் பிஜேபி..!

மேற்கு வங்கத்தில் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பேனர்ஜி தலைமையிலான அரசு நடந்து வருகிறது. மேற்கு வங்கத்தின் அசைக்க முடியாத சக்தியாக இருந்த இடதுசாரிகளை வீழ்த்தி ஆட்சி நார்காலியை கைப்பற்றிய மம்தா பேனர்ஜிக்கு தற்போது பெரும் தலைவலியாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது பாஜக. அங்கு கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் விஸ்வரூபமெடுத்த பாஜக 18 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2021ம் ஆண்டில் அந்த மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கவேண்டும் என பாஜக கடுமையாக முயற்சி செய்து வருகிறது.
அந்த முயற்சியின் விளைவாக அந்த மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரசில் இருந்து முக்கிய தலைவர்களை தங்கள் கட்சிக்கு இழுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் விளைவாக திரிணாமூல் காங்கிரசின் முக்கிய தலைவர்கள் திரிணாமூல் காங்கிரசில் இருந்து விலகி ஒவ்வொருவராக பாஜகவில் இணைந்து வருகிறார்கள். ஒரு காலத்தில் மம்தாவின் வலது கரமாக இருந்த சுவேந்து அதிகாரி கூட பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். ஏற்கனவே வடக்கு மேற்கு வங்கத்தில் பாஜக அசுர வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் திரிணாமூல் காங்கிரசின் தெற்கு முகமாக அறியப்பட்ட சுவேந்து அதிகாரியும் தற்போது பாஜகவில் இணைந்தது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது மேற்கு வங்கத்தில் மாநில வனத்துறை அமைச்சராக இருந்த வருகிற ராஜிப் பேனர்ஜியும் மம்தாவின் அமைச்சரவையில் இருந்து விலகியுள்ளார். அவர் கூடிய விரைவில் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.