அனைத்துப் பள்ளி கல்லூரிகளிலும் அனுமான் பஜனை செய்ய கெஜ்ரிவால் அரசு கட்டாயப்படுத்த வேண்டும் – பாஜக கோரிக்கை

பாரதிய ஜனதாவை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் அதன் தலைவர்கள் எப்போதும் மக்களை கிளர்ச்சி ஊற வைக்கும் விதமாக மதம் ஜாதி உணர்வை தூண்டிவிடும் ரியல் பேசி வருவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் பேசும் நபர்களில் முதன்மையான நபராக இருப்பவர் தற்போதைய பாஜக வின் பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா. டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக பெருமான் வைக்கும் அதிகமாக சுமார் 62 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது இதற்கு வாழ்த்து தெரிவித்த கைலாஷ் விஜயவர்ஜியா கூடவே சில சர்ச்சைக்குரிய கேள்விகளையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அது என்னவென்றால், அரவிந்த் கெஜ்ரிவால் ஜி-க்கு வாழ்த்துக்கள்! ஹனுமானின் அருள்வேண்டி யார் வந்தாலும் அவர்களுக்கு ஆசீர்வாதம் கிடைக்கும் இனி டெல்லியில் உள்ள பள்ளி கல்லூரி நிறுவனங்களிலும், மசூதிகள் மற்றும் மதரஸாக்கள் அனுமானின் பஜனை பாடல் பாடுவதை கட்டாயப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. டெல்லி குழந்தைகள் பஜ்ரங்பளி ஆசீர்வாதத்தை ஏன் இழக்க வேண்டும் என கேள்வி எழுப்பி அந்த சர்ச்சை கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
இதற்கு பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் அனைத்து மதத்தையும் பின்பற்றும் குழந்தைகள் இருக்கும் இடத்தில் எந்த ஒரு மத வழிபாட்டு கட்டாயப்படுத்துவது ஏற்க முடியாது என கருத்து தெரிவித்து வருகின்றனர். இவ்வளவு படுமோசமான தோல்வியினை மத்தியில் ஆளும் கட்சியை எதிர்கொண்ட பிறகும்கூட திருந்தாத மன நிலைமையுடன் பேசுவது சரியா என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இவர்களின் இந்த பேச்சுக்கு முக்கிய காரணம் முதல்வராக பொறுப்பேற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் செயல்பாடுதான் கெஜ்ரிவால் இந்த தேர்தலின் போது தன்னை ஒரு அனுமான் பக்தராக காட்டிக் கொள்ள ஆரம்பித்தார் இந்து மதத்தின் மீது அதிக பற்று கொண்டவராகவும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடும் அவர்களை பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டும் போன்ற கருத்துக்களை தெரிவித்து இந்துத்துவாவை திருப்திபடுத்த முயற்சித்து வருகிறார். மேலும் தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு பறித்ததை சரியான முடிவு பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.