ஆலங்குளம் பாலியல் வன்முறைக்கு உள்ளான சிறுமிக்கு கல்வி வேலை பாதுகாப்பு கோரி தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மாதர் சங்கத்தின் சார்பில் மனு

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நவம்பர் 26 ம் தேதி நான்கு கயவர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் நான்கு குற்றவாளிகளும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளனர். டிசம்பர் 9ம் தேதி தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மாதர்சங்கம் சார்பாக மனுகொடுக்கப்பட்டுள்ளது.
மனுவில் கீழ்க்கண்டவாறு..
1. பாதிக்கப்பட்ட சிறுமி மேற்கொண்டு படிப்பை தொடர பாதுகாப்புடன் கல்வி அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உத்திரவாத படுத்த வேண்டும்.நிர்பயா நிதியிலிருந்து 10,00,000 வழங்க வேண்டும்.
ஆலங்குளம் பாலியல் வன்முறைக்கு உள்ளான சிறுமிக்கு கல்வி வேலை பாதுகாப்பு கோரி தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மாதர் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மாதர் சங்க மாவட்ட செயலாளர் கற்பகம், துணை தலைவர் சங்கரி, சிஐடியு மாவட்ட தலைவர் வேல்முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கணபதி, ராஜகுரு, தென்காசி கமிட்டி ராமமூர்த்தி மற்றும் சிறுமியின் சகோதரர் பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டனர்.