பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் காவல்துறை தடையை மீறி நடக்கும் – Aidwa வாசுகி

கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் பலவந்தமாக கல்லூரி மற்றும் வேலை தேடிச் சென்ற பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் தப்பிக்க விடும் முயற்சியில் தற்போது தமிழக அரசு ஈடுபட்டு வருவதால், சமீபத்தில் அவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. ஏனெனில் இந்த வழக்கில் பொள்ளாச்சி காவல்துறை அதிகாரிகள் உரிய ஆவணங்கள் சமர்பிக்க அதன் விளைவு குற்றவாளி அனைவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருந்து தற்போது தப்பித்து உள்ளனர். இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியும் காவல்துறையினர் அலட்சியத்தை கண்டித்தும் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடை பெறுவதாக அறிவிப்பு செய்யப்பட்டது இதனிடையே இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை தடை விதித்துள்ளது எனினும் காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடக்கும் என அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் வாசுகி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.