உலகம் முழுவதும் இணையதளங்களில் ஆபாச படம் பார்ப்போர் 95% அதிகரிப்பு: கூகுள், பேஸ்புக், டுவிட்டருக்கு நோட்டீஸ்

கோரனா வைரஸால் உலகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்தியாவிலும் இணையதளங்களில் ஆபாச படங்களில் சிறார்களை பயன்படுத்தும் படங்களை பார்ப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக, இந்தியாவின் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்), இணைய, சமூக வலைதளங்களான கூகிள், டுவிட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சிறுவர் பாலியல் மீறல் மற்றும் ஆபாசப் பொருள் தொடர்பான புகார்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு கூகிள், டுவிட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களிடம் தேசிய குழந்தைகள் உரிமைகளுக்கான தேசிய ஆணையம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளது.
மேலும், கூகுள், டுவிட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் அனைத்திலும் இது போன்ற சிறுவர் தொடர்பான மற்றும் ஆபாச படங்கள் வெளியாவதை சமாளிக்க, என்ன மாதிரியான கொள்கையைப் பின்பற்றுகிறார்கள் என்பதையும் கேட்டுள்ளது.